உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில கைப்பந்து போட்டி மதுரை அணி சாம்பியன்

மாநில கைப்பந்து போட்டி மதுரை அணி சாம்பியன்

வாடிப்பட்டி: அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழா மாநில குழு விளையாட்டுப் போட்டிகள் வாடிப்பட்டியில் நடந்தது. 17 வயது மாணவருக்கான கைப்பந்து போட்டியில் முறையே முதல் 4 இடங்களை மதுரை தனபால் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர் ஜி.எஸ்.,ஹிந்து மேல்நிலைப்பள்ளி, விழுப்புரம் விகாஸ் மேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி அணிகள் பிடித்தன. மாணவிகள் பிரிவில் விழுப்புரம் விகாஸ் மேல்நிலைப் பள்ளி, கோவில்பட்டி லட்சுமி மேல்நிலைப் பள்ளி, ஈரோடு ஜெய்காஸ் மெட்ரிக் பள்ளி, மதுரை நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி அணிகள் பிடித்தன.பரிசளிப்பு விழாவுக்கு தாய் பள்ளி நிர்வாகி காந்தி தலைமை வகித்தார். உடற்கல்வி ஆய்வாளர்கள் மகேந்திரன், பெரியசாமி, ஜெயலட்சுமி, குமரேசன் முன்னிலை வகித்தனர். ஆய்வாளர் வினோத் வரவேற்றார்.விளையாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், கைப்பந்து பயிற்சியாளர் குமரேசன், பாண்டியராஜபுரம் தலைமை ஆசிரியர் விஜயகுமார் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை