மேலும் செய்திகள்
மூன்று வேளையும் உணவு வழங்க நெல்லை பாலு இலக்கு
20-Oct-2026
மதுரை: மதுரை கூடல்நகர் வ.உ.சி., தெரு மஹா பெரியவர் கோயிலில் அனுஷ உற்சவம் நடந்தது. சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் உற்ஸவத்தை நடத்தினர். காஞ்சி மஹா பெரியவரின் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு பல்வேறு பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் ருத்ரா அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ‘உண்டென்பார்க்கு உண்டு’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ஆத்மார்த்தி பேசுகையில், ‘‘நடமாடும் தெய்வமாய் இருந்து அருளிய மஹா பெரியவரை சரணடைந்தவர்களுக்கு குரு அருள் கிடைக்கும்’’ என்றார். ஓய்வுபெற்ற எஸ்.பி., மணிவண்ணன், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க உறுப்பினர் ஆதவன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
20-Oct-2026