பராமரிக்காத பேட்டரி வாகனங்கள்
பாலமேடு: பாலமேடு பேரூராட்சியில் துப்புரவு பணிக்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பராமரிப்பின்றி அடிக்கடி பழுதாகின்றன.இப்பேரூராட்சியில் 15 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு திருமண மகால்கள், மருத்துவமனைகள், பூ, பெட்டி கடைகள் உள்ளன. தினமும் சேகரமாகும் ஏராளமான குப்பையை சேகரிக்க சில ஆண்டுகளுக்கு முன் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.முன்னதாக வழங்கிய மினி சரக்கு வேன்கள் பழுதாகி பேரூராட்சி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பேட்டரி வாகனங்களும் பராமரிப்பின்றி நிற்கின்றன. பயன்பாட்டில் உள்ள பேட்டரி வாகனங்களும் அவ்வப்போது பழுதாவதால் துாய்மை பணியாளர்கள் அவற்றைத் தள்ளிச் செல்லும் நிலை உள்ளது. பேட்டரி வாகனங்களை பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.