ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
வாடிப்பட்டி: சமயநல்லுார் வைகை ரோடு குபேர லட்சுமி நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகை சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு ராமானுஜம் குருசாமி குருபூஜை நடந்தது. ஐயப்ப பக்தர்கள், பஜனை குழுவினர் பக்தி பாடல் பாடி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.