உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

மதுரை: மதுரை விளத்துார் தங்கமய முருகன் கோயிலில் சந்தான லட்சுமி அம்மனுக்கு மண்டல பூஜை நடந்தது. விநாயகர் பூஜையுடன் தொடங்கி, ஹோமங்கள் நடைபெற்று, புரோஹிதர் சுரேஷ் ஷர்மா குழுவினர் வேதமந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள் குப்புலால், தேசிகன் மண்டல பூஜை நடத்தினர். சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் வெங்கடபதி, இந்திராபதி, கணேசன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்