உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை

மதுரை: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத் தொகை கோரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவனத்திடம் இருந்து ஒரு பெண் குழந்தையெனில் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் எனில் தலா ரூ.25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும். இத்தொகை அக்குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் வழங்கப்படுகிறது.மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தில் விண்ணப்பிக்காமல் உள்ள பயனாளிகள் சேமிப்பு பத்திரத்துடன், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக் நகல்களுடன் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !