30 ஆண்டுகளுக்கு பிறகு அளவிடும் பணி
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பேரூராட்சியாக இருந்து 1995ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த சந்தை திடல் பகுதி நகராட்சி வசம் ஒப்படைக்கவில்லை. கடந்தாண்டு மார்ச் 2024ல், நகராட்சி வசம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டது. எதிர்த்து ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ரஞ்சனி நீதிமன்றத்தை அணுகினார். தற்போது பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு சந்தை திடலுக்குள் கூடுதலாக ஒரு ஏக்கர் தேவைப்படும் நிலை உள்ளது. தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமானதால் நகராட்சி நிர்வாகத்திற்கு கொண்டு வருவதற்காக அளவிடும் பணி தாசில்தார் பாலகிருஷ்ணன், நில அளவையர்கள், வி.ஏ.ஓ., க்கள், நகராட்சி பொறியாளர் சசிக்குமார் முன்னிலையில் நடந்தது.