உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்களுக்கான மருத்துவ முகாம்

பெண்களுக்கான மருத்துவ முகாம்

திருமங்கலம்: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆரோக்கிய இயக்கம், மதுரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய பெண்களுக்கான முதலுதவி மற்றும் மருத்துவ முகாம் உசிலம்பட்டி ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. ஆரோக்கிய இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனீஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் முத்துலட்சுமி தொடங்கி வைத்தார். ஐ.சி.எம்.ஆர்., மருத்துவ நிறுவன ஆராய்ச்சியாளர் மகேஷ் குமார், அறிவியல் இயக்க இணை செயலாளர் காமேஷ் பேசினர். மகளிர் சுய உதவி குழுவினர், துாய்மை காவலர்கள் கலந்து கொண்டனர். * தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ சேவை அணி, திருமங்கலம் தனியார் ஓமியோ கிளினிக் இணைந்து பெண்களுக்கான இலவச முகாமை நடத்தினர். மருத்துவர் அணி நகர தலைவர் அஜ்மீர் அலி தலைமை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் ரம்ஜான் பேகம் துவங்கி வைத்தார். டாக்டர் பெனாசிர் ஆசிக், உடல் நல பயிற்சியாளர் ஜாஸ்மின் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை