உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை, வி.என். நியூரோ மருத்துவமனை குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன், ராஜன் நரம்பியல் மையம் சார்பில் நிலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மகளிர் மருத்துவ முகாம் நடந்தது. கல்லுாரி செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். துறை தலைவர் அன்பழகன் வரவேற்றார். 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தலைமை ஆசிரியர் மேரிலா ஜெயந்தி அமுதா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ