உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  செயலி மூலம் தியான பயிற்சி

 செயலி மூலம் தியான பயிற்சி

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கலை, பண்பாட்டுக்குழு, ரோட்ராக்ட் கிளப், வேதிக் சாதனா அறக்கட்டளை சார்பில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தியான செயலி மூலம் தியான பயிற்சி வழங்கப்பட்டது. கல்லுாரி செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், கவுரவ தலைவர் ராஜ கோபால் முன்னிலை வகித்தனர். சுயநிதிப்பிரிவு இயக்குநர் பிரபு வரவேற்றார். முதல்வர் ராமசுப்பையா தியான பயிற்சியின் முக்கியத்துவம், இன்றைய இளம் தலைமுறையினர் மனது, உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என விளக்கம் அளித்தார். பயிற்சியாளர் ஸ்ரீகர் ஸ்ரீபார்த்து, மாணவர்களுக்கு தியான பயிற்சியை அளித்தார். மூன்று சுற்றுக்களாக நடந்த பயிற்சி வகுப்பில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர்கள் ரஞ்சித் குமார், சுஜித்ரா தியான ஏற்பாடுகளை செய்தனர். கிளப் மாணவர் தலைவர் நித்திஸ் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ