மீனாட்சி அம்மனுக்கு இன்று தங்ககவசம்
மதுரை : தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன.29) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர் அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் சாத்தப்படுகிறது. மூலவர் சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்படுகிறது. இன்று காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கண்டு தரிசிக்கலாம்.