மேலுார் மாணவர் ஆசிய சாதனை
மேலுார்: மேலுார் காந்திநகர் லாரி டிரைவர் சதாசிவம் - கவிதா தம்பதியர் மகன் சரண்குமார் 20, கோவை தனியார் பாராமெடிக்கல் கல்லுாரி 2ம் ஆண்டு மாணவர். நேபாளம், போக்ராவில் நடந்த ஆசிய கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு பயிற்சியாளர் ஜோயஸ் எமர்சன், பல்வேறு சங்கத்தினர், ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். மாணவர் சரண்குமார் கூறியதாவது: இப் போட்டியில் ஐந்து நாடுகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் பங்கேற்று நேபாளம் வீரரை வென்றேன். கிராமப்புற மாணவர்களுக்கு அரசு கல்வியில் சலுகை, வேலைவாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.