உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருப்பரங்குன்றம்; மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, பிரான்ஸ் நாட்டின் பதவான் இன்ஜினியரிங் இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.தியாகராஜர் பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாணவரும், பதவான் இன்ஜினியரிங் இந்தியா நிறுவன இயக்குனருமான ஜெயசூரியா, கல்லுாரி முதல்வர் அசோக்குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜெயசூரியா கூறுகையில், ''இக்கல்லுாரியின் மெக்கட்ரானிக்ஸ், மின் மற்றும் மின்னணு பொறியியல், மெக்கானிக்கல் துறைகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடி தொழில் துறை அனுபவங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் நேரடி பங்கேற்கவும், பயிற்சிக்குப் பின்பு பிரான்ஸ் நிபுணர்களுடன் பணி புரியும் வாய்ப்பும் வழங்கப்படும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ