3 ஆண்டுகளாக திறக்கப்படாத கனிமவள அலுவலக கட்டடம்
மதுரை : மதுரை மண்டல கனிமவள இணை இயக்குனர் அலுவலகம் கட்டி மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது இந்த அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் மாடிக்கு செல்லும் படியின் கீழ் மிகவும் குறுகலான ஒரு அறையில் செயல்படுகிறது. புதிய கட்டடம் வண்டியூர் ரிங் ரோடு பிரிவில் இருந்து சிவகங்கை நோக்கி செல்லும் ராணி மங்கம்மாள் சாலையில் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் திறக்கப்படாததால் பொலிவிழந்து வருகிறது. தென்மாவட்டங்கள் பலவும் இதன் கீழ் உள்ளதால் விசாலமான கட்டடம் தேவை என கட்டப்பட்டது. தேவையான அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. காடு போன்ற பகுதியில் தனியாக இருக்கிறது என்பதால் இடமாற தயங்குகிறார்களா எனத்தெரியவில்லை. மக்களின் வரிப்பணம் வீணாவதை தவிர்க்க இக்கட்டடத்தை பயன்படுத்த வேண்டும்.