உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மினிபஸ் கவிழ்ந்து: 36 பேர் காயம்

மினிபஸ் கவிழ்ந்து: 36 பேர் காயம்

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் தலைகீழாக கவிழ்ந்ததில் 36 பேர் காயம் அடைந்தனர். சோழவந்தானை அடுத்த கருப்பட்டி பகுதியில் இருந்து மினிபஸ் ஒன்று வாடிப்பட்டிக்கு 45 பயணிகளுடன் வந்தது. கரட்டுப்பட்டி டிரைவர் தங்கவேல் 25, ஓட்டினார். பாண்டியராஜபுரம் அருகே வளைவில் வேகமாக வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், ரோட்டில் தலைகீழாக கவிழ்ந்தது. 36 பயணிகள் காயமடைந்தனர். வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எலும்பு முறிவு, தலை, கை, கால் முகம் என படுகாயமடைந்த 2 சிறுவர்கள், 8 ஆண்கள் 19 பெண்கள், மூதாட்டிகள் உட்பட 28 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபட்டனர். '108' ஆம்புலன்ஸ் வரத்தாமதமானதால், காயமடைந்தவர்களை வெங்கடேசன் எம்.எல்.ஏ., உட்பட தி.மு.க.,வினர் வேன், கார்களில் மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை