வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கமிஷன் வரவை ஃபோஸ் மெஷினில் எண்ணவே மேயருக்கு நேரம் போதாது. ஒருவேளை தனித்தனியா சர்ப்ரைசா ரிவ்யூ பண்றாங்களோ என்னவோ !
மதுரை : மதுரையில் மத்திய தொகுதியில் 21வது வார்டில் அமைச்சர் தியாகராஜன் மக்கள் சந்திப்பு, வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வாரம் ஒரு வார்டு என்ற அடிப்படையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தியாகராஜன் துவக்கி யுள்ளார். நேற்று இரண்டாவது நிகழ்ச்சியாக 21வது வார்டில் சுற்றுப் பயணம் செய்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் சித்ரா சென்றார். தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக கட்டப்பட்ட சமு தாயக் கூடத்தை திறந்தார். அருள்தாஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். மக்கள் சந்திப்பு முதல் நிகழ்ச்சியை போல் நேற்றும் வட்ட, பகுதி செயலாளர்கள் தவிர கவுன்சிலர்கள், கட்சி யினர் பங்கேற்க கூடாது என கூறிவிட்டார். இதனால் அந்த வார்டு தவிர பிற கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. வழக்கமாக அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மேயர் இந்திராணியும் வரவில்லை. மாநகராட்சி உதவி கமிஷனர் ரவிக் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கமிஷன் வரவை ஃபோஸ் மெஷினில் எண்ணவே மேயருக்கு நேரம் போதாது. ஒருவேளை தனித்தனியா சர்ப்ரைசா ரிவ்யூ பண்றாங்களோ என்னவோ !