உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் விரைவில் மெமு ரயில் சேவை ரயில்வே இணை அமைச்சர் பரிசீலனை

மதுரையில் விரைவில் மெமு ரயில் சேவை ரயில்வே இணை அமைச்சர் பரிசீலனை

மதுரை : 'மதுரை கோட்டத்தில் 'மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்' (மெமு) வகை ரயில் சேவையை துவக்குவது குறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்' என அகில் பாரதிய கிரஹக் பஞ்சாயத்தின் (ஏ.பி.ஜி.பி.,) தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் சத்தியபாலன் தெரிவித்தார்.ஆன்மிக தலம், சுற்றுலாத் தலம், உயர்நீதிமன்ற கிளை, பல்கலை, சிறப்பு மருத்துவமனைகள் உட்பட முக்கியமான அமைப்புகள் உள்ள மதுரைக்கு, தென் மாவட்டத்தினர் பல ஆயிரம் பேர் தினமும் கல்வி, வேலைக்காக மதுரை வருகின்றனர். பக்கத்து மாவட்டங்கள், கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் விளைபொருட்கள் மதுரை சந்தைக்கு வருகின்றன.இதனால் மதுரையில் 'மெமு' ரயில்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. தெற்கு ரயில்வேயில் திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், சென்னை கோட்டங்களில் 'மெமு' ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மதுரை கோட்டத்தில் ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை.200 கி.மீ., வரை துாரம் கொண்ட நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துக்கு 'மெமு' வகை ரயில்கள் உகந்தவை. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் (162 கி.மீ.,), துாத்துக்குடி (159 கி.மீ.,), திருநெல்வேலி (157 கி.மீ.,), செங்கோட்டை (174 கி.மீ.,), போடி (90 கி.மீ.,), பொள்ளாச்சி (183 கி.மீ.,), திருச்சி (157 கி.மீ.,), மானாமதுரை வழியாக காரைக்குடி (110 கி.மீ.,) என அனைத்து ஊர்களும் 200 கி.மீ., தொலைவிற்குள் வருவதால் 3 மணி நேரத்திற்குள் பயணம் அமையும்.ஏற்கனவே இவ்வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதால் மதுரையை மையமாக கொண்டு எளிதில் மெமு ரயில்களை இயக்க முடியும். இதன் மூலம் பஸ்சைவிட குறைந்த கட்டணத்தில் விரைவான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.சத்தியபாலன் கூறியதாவது: 2023 டிசம்பரில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடமும், பின்னர் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடமும், மெமு ரயில் இயக்க மனு அளித்தோம். மதுரை - துாத்துக்குடி புதிய வழித்தட பணிகளை விரைந்து முடிக்கவும், மதுரை - விழுப்புரம், மதுரை - புனலுார் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி இயக்கவும்,மதுரை கோட்டத்தில் மெமு ரயில்களை இயக்கவும், கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனில் மெமு ரயில் பணிமனை அமைக்கவும் வலியுறுத்தினோம். அதனை பரிசீலித்து, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். மெமு ரயில் சேவை வந்தால், தென் மாவட்டங்களில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வியாபாரம் பெருகும்என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sathiesh
நவ 03, 2024 13:22

ஆம்னி பஸ் மாஃபியாவும் இதற்கு மற்றுமொரு காரணம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 28, 2024 12:52

இப்போது நினைத்தால் கூட மேமு ரயில்களை இயக்க முடியும். அப்படி செய்துவிட்டால் மக்கள் எளிதாக மகிழ்ச்சியாக பயணம் செய்துவிடுவார்கள் அல்லவா? தொழிலும் பெற்றுவிடும். மக்கள் வளமாகிவிடுவார்கள். திராவிட கட்சிகளை நம்பி, அண்டி பிழைக்க தேவை இல்லை. அப்புறம் மக்கள் இந்த திருட்டு திராவிடத்தை கேள்வி கேட்க ஆரம்பிப்பார்கள். இந்த அரசியல்வியாதிகளால் மக்களை கொள்ளையடித்து சுகபோகமாக வாழமுடியாது. அதனால் மக்களும் நாடும் ஒருபோதும் வளர்ச்சி பெற்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். அதனால்தான் சும்மா தேவையற்ற காரணங்களை சொல்லி இழுத்துக்கடத்துகிறார்கள். அப்புறம், மத்திய ரயில்வே துறையும் மலையாள லாபியில் தமிழகம் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. இன்றைக்கு தமிழக ரயில்வே துறையில் பிற மாநில உயர் அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு நமது தமிழ்நாட்டில் ரயில்வே துறை முன்னேறவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர். இதுதான் உண்மை. ஒவ்வொருமுறையும் ஏழை எளிய மக்கள் பயணம் செய்ய படும்பாடே இதற்க்கு சாட்சி.


S Ramkumar
அக் 28, 2024 11:09

உங்கள் தோழர் வெங்கடேசனை பாராளுமன்றத்தில் இவற்றை பேச சொல்லுங்கள். அவருக்கு செங்கோலை பற்றி பேசவே நேரம் போதவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை