வகுப்பறைகள் அமைச்சர் திறப்பு
மதுரை: மதுரை வரிச்சியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நான்கு புதிய வகுப்பறைகளை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள், மேஜைகள், நாற்காலிகள், கரும்பலகைகள் கொண்ட வகுப்பறையாக திறக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ரவுண்ட் டேபிள் இந்தியா மூலம் தேசிய நன்கொடையாளர்களின் ஆதரவுடன் திரட்டப்பட்டது. அரசியல் சாராத இவ்வமைப்பு பல ஆண்டுகளாக குழந்தைகள் பயனடையும் வகையில் பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகிறது.