கிண்டலாக ட்வீட் செய்த அமைச்சர்
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுமா என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர்களை கிண்டல் செய்யும் விதமாக 'உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது' என அமைச்சர் நிர்மல்குமார்(திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.,) எக்ஸ் தளத்தில் 'ட்வீட்' செய்தது பக்தர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததற்கான காரணம் எதையும் அவர் வெளியிடவில்லை. இதே போன்று மாணிக்கம் தாகூர் எம்.பி., வெங்கடேசன் எம்.பி., ஆகியோர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது: சங்கி மங்கிகளுக்கு ஏமாற்றம் தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர்: தீபத்திருவிழாவில் அரசியல் செய்ய வந்த சங்கி மங்கிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது த.வெ.க., அரசுக்கு பாராட்டுகள் எம்.பி., வெங்கடேசன்: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகாமை கல் துாண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது. திருப்பரங்குன்றம் கோயிலின் மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழகத்தின் மதநல்லிணக்கத்தை நிலைநிறுத்திய த.வெ.க., அரசுக்கு பாராட்டுகள்.