அமைச்சர் அப்செட்
வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி கட்டபுளி நகரில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கலெக்டர் பிரவீன்குமார், வெங்கடேசன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, செயற்பொறியாளர் இந்துமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மைக் செட்' இல்லாததால் கலெக்டர், எம்.எல்.ஏ., உரத்த குரலில் பேசினர். அமைச்சர் உள்ளிட்டோர் 'அப்செட்' ஆயினர். பின் 'மைக் செட்' கொண்டு வரப்பட்டு அமைச்சர் பேசினார்.