அரசு மாணவர்களுக்கு இன்று மாதிரி நீட் தேர்வு
மதுரை; மதுரையில் கல்வித்துறை சார்பில் நீட் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 3 இடங்களில் இன்று (ஏப்.,30) மாதிரி தேர்வு நடக்கிறது.மாவட்டத்தில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் படித்த 205 மாணவர்களுக்கு ஒத்தக்கடை அரசு மாதிரி பள்ளி, எம்.சி., மேல்நிலை, திருமங்கலம் பி.கே.என்., பள்ளிகளில் மார்ச் 29 முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு 24 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். சி.இ.ஓ., ரேணுகா உத்தரவின் பேரில் இம்மாணவர்களுக்கு இன்று மாதிரி தேர்வு நடத்தப்படவுள்ளது. மாவட்ட போட்டித் தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் வெண்ணிலா தேவி, மீனாட்சி சுந்தரம், மோசஸ், ஞானகுரு, மெர்லின் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.