மேலும் செய்திகள்
சேதமான ஆர்.ஐ., அலுவலகம் சீரமைக்க மக்கள் கோரிக்கை
04-Jul-2025
மேலுார்: மேலுாருக்கு நியமிக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே மேலுாரிலும், பிற நாட்கள் வேறு அலுவலகத்திலும் பணிபுரிவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். விநாயகபுரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. ஆய்வாளர் மே மாதம் இடமாற்றப்பட்ட நிலையில் புதிதாக நியமிக்கப்பட்டவர் வியாழக்கிழமை மட்டுமே வருகிறார். ஆள் பற்றாக்குறையால் மற்ற நாட்களில் மதுரை வடக்கில் 3, வாடிப்பட்டியில் ஒரு நாள் பணிபுரிகிறார். அதனால் மேலுார் பகுதி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வருவதால் அன்று கூட்டம் அதிகமாகி தள்ளுமுள்ளுகூட ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமை முடிவடையும் வாகனத்திற்கு தகுதி சான்று பெற வியாழக்கிழமை வரை காத்துக் கிடப்பதோடு வாகனத்தையும் ஓட்ட முடியாமல் கடன்களையும் கட்ட முடியாமல் அவதிப்படுகிறோம். விபத்தில் சிக்கிய வாகனங்களை ஆய்வாளரிடம் காண்பிக்க காத்து கிடக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் வாகன ஆவணங்களில் திருத்தம் செய்ய விடுமுறையில் வருபவர்கள் குறித்த நேரத்தில் வெளிநாடு செல்ல முடியவில்லை. மேலுாருக்கு ஆய்வாளர் தினமும் வர போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
04-Jul-2025