உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாடிப்பட்டியில் மயான அவலம்

வாடிப்பட்டியில் மயான அவலம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் புதிய மயானம் பயன்பாட்டுக்கு வந்ததால் பழைய மயானம் பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. வாடிப்பட்டி பழைய நீதிமன்றம் அருகே புதிதாக எரிவாயு தகனமேடையுடன் கூடிய மயானம் அமைக்கப்பட்டது. இதனருகே முன்பு பயன்படுத்திய பழைய மயானம் பராமரிப்பின்றி கைவிடப்பட்டது. இங்குள்ள குளியல்தொட்டி பயன்படுத்தப்படாமல் மூடப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு செய்ய வருவோர் புதிய மயானத்தின் பின்புறம் ஒரேஒரு குழாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தி குளிக்கின்றனர். இதனால் நேர விரயமாவதுடன் வளாகத்தில் தண்ணீர் தேங்கி சுகாதாரம் பாதிக்கிறது. பழைய மயானம் அருகே உள்ள கழிப்பறை பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கு வருவோர் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பழைய மயானத்தை அகற்றிவிட்டு, அவ்விடத்தை அரசின் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என பொது மக்கள் கருதுகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து சரி செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை