உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆவணங்கள் இல்லாத எம்.சாண்ட் லாரியை கைப்பற்றி விசாரணை

ஆவணங்கள் இல்லாத எம்.சாண்ட் லாரியை கைப்பற்றி விசாரணை

உசிலம்பட்டி; உசிலம்பட்டி தேனி ரோட்டில், புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனித்துணை தாசில்தார் சிங்காரவேலன், வருவாய் ஆய்வாளர் வடிவேல், களப்பணியாளர் பார்த்திபன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5:00 மணியளவில், வடுகபட்டியைச் சேர்ந்த பாண்டி42, என்பவர் தேனியில் இருந்து உசிலம்பட்டிக்கு எம்.சாண்ட் ஏற்றி, ஓட்டி வந்த டிப்பர் லாரியை தடுத்து விசாரணை நடத்தினர். சி.டி.ஆர்., புளூமெட்டல் என்று எழுதப்பட்ட ரசீதை மட்டும் காண்பித்துள்ளார். உரிய நடைச்சீட்டு இல்லாததால் டிப்பர் லாரியை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ