உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நகராட்சி அலுவலகம் முற்றுகை

 நகராட்சி அலுவலகம் முற்றுகை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் 120 க்கும் மேற்பட்டவர்கள் தினசரி காய்கறி கடைகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியம் வசம் சந்தை திடல் இருந்த போது தினசரி ரூ.10 தரை வாடகையாக கொடுத்தனர். நகராட்சி வசம் வந்த பின்பு, தினசரி ரூ.100 வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகி பிச்சை உள்ளிட்ட நிர்வாகிகள், பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி மற்றும் கடைக்காரர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சப் கலெக்டர், வருவாய்த்துறையினர், போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். தவறினால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை