உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இசை விழா துவக்கம்

இசை விழா துவக்கம்

மதுரை, : மதுரையில் வேங்கடரமண பாகவதரின் 244ஆம் ஜெயந்தி இசைநிகழ்ச்சி தொடக்க விழா ஸ்ரீரங்க மஹாலில் நேற்று நடந்தது. தலைவர் ரவீந்திரநாத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேனேஜிங் டிரஸ்டி சுரேஷ் கலந்து கொண்டார்.காலையில் சைத்ரா, நந்தினி ஜவகர், மல்லிகா ஆகிய இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும், மாலையில் மீனாட்சி குழுவினரின் பாட்டு, ஆனந்தி குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவில் குவாலிட்டி நிட்ஸ் குமரன், சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் முன்னாள் தலைவர்கள் மோகன்ராம், சேகர், டாக்டர்கள் சுப்பிரமணியன், ஜெயப்பிரகாஷ், ரமேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ