உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாராயண் தேசாய் நுாற்றாண்டு விழா

நாராயண் தேசாய் நுாற்றாண்டு விழா

மதுரை : மதுரை காந்தி மியூசியம் சார்பில் மதுரை காந்தி என்.எம்.ஆர். சுப்பராமன் கல்லுாரியில் நாராயண் தேசாய் நுாற்றாண்டு விழா, இந்திய தேசிய காங்கிரசுக்கு காந்தி தலைமைப் பொறுப்பு வகித்த நுாறாம் ஆண்டு விழா நடந்தது. பேராசிரியை கல்பனா பல்சமயப் பாடல்களை பாடினார். முதல்வர் கோமதி வரவேற்றார். கல்லுாரி நிறுவனர் ஜவஹர் பாபு தலைமை வகித்தார். காந்திக்கும், தேசாய்க்கும் உள்ள தொடர்பு குறித்து காந்தி கிராம பல்கலையின் ஓய்வு பேராசிரியர் ராஜா, மியூசிய பொருளாளர் செந்தில்குமார், செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் பேசினர். இளநிலை உதவியாளர் நித்யாபாய் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை