உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தேசிய பூப்பந்து: தங்கம் வென்ற மாணவிகள்

 தேசிய பூப்பந்து: தங்கம் வென்ற மாணவிகள்

மதுரை: தேசிய அளவிலான பூப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற மதுரை ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கம் பெற்றனர். 44வது சப் ஜூனியர் தேசிய அளவிலான பூப்பந்து போட்டி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் நடந்தது. தமிழக அணி சார்பில் பங்கேற்ற 10 பேர் இறுதிப்பட்டியலில் மதுரை ஓ.சி.பி.எம். பள்ளி மாணவிகள் நிகிதா, ரஷிதா, கோபிகா, மிதுனா இடம்பெற்றனர். இறுதிப்போட்டியில் தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. நிகிதா கேப்டனாகவும், அணி பயிற்சியாளராக ராஜேஷ்கண்ணனும் பங்கேற்றனர். சிறப்பாக விளையாடிய நிகிதா, ரஷிதாவிற்கு 'ஸ்டார் ஆப் இந்தியா' விருது வழங்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் தயாளன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கார்மேகம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வினோத், தலைமையாசிரியை மேரி பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ