உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தேசிய அளவில் கராத்தே போட்டிகள்

 தேசிய அளவில் கராத்தே போட்டிகள்

மதுரை: மியாகி வேர்ல்ட் கோஜுரியு கராத்தே பள்ளி சார்பில் மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் கிங் சாம்பியன்ஸ் டிராபிக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் வெற்றி பெற்றனர். நவீன் குமார், ஜோதி வேலன், சுதீப், லிதர்ஷனா ஸ்ரீ, ஹரிஷ், சுபஹர்சினி, அஸ்வந்த், தமிழ் முகிலன், அத்தாவுல்லா இப்ராஹிம் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். ரிஷ்வந்த், சாம்சங், ஆரோன் ராஜா இரண்டாம் பரிசும், பிரணவ் மூன்றாம் பரிசு பெற்றனர். தலைமை பயிற்சியாளர் ராஜா, தொழில்நுட்ப இயக்குநர் வைரமணி, பயிற்சி யாளர்கள் டி. ராஜா, முத்து கிருஷ்ணன், தினேஷ் குமார், அஜய் கிருஷ்ணா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ