உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி

தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி

சோழவந்தான் : துாத்துக்குடியில் தமிழ்நாடு அமெச்சூர் நெட் பால் சங்கம், இந்திய நெட் பால் கூட்டமைப்பு சார்பில் ஜூனியர் தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. 27 அணிகள் பங்கேற்றன. முதல் அரை இறுதிப் போட்டியில் தமிழக அணி 25 -- 19 என்ற கணக்கில் தெலுங்கானாவை வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் தமிழக அணி 29- - 26 என்ற புள்ளி கணக்கில் கேரளா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழக அணியில் சிறப்பாக செயல்பட்ட சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளி மாணவர்கள் ராம்பிரசாத், முகமது வாகீத், பயிற்சியாளர் ஜெகதீஷை பள்ளித் தலைவர் செந்தில்குமார், நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி