தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழு ஆய்வு
மதுரை: மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழு நேற்று ஆய்வு செய்தது. இக்குழு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பாடுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்து தரச்சான்று வழங்கி வருகிறது. 2024 ல் மாநகராட்சி பகுதியில் மேற்கொண்ட ஆய்வில் மஸ்தான்பட்டி, முனிச்சாலை, அண்ணாத்தோப்பு, ஆனையூர், செல்லுார் உட்பட 12 நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று வழங்கியது. இந்தாண்டுக்கான ஆய்வாக அருள்தாஸ்புரம் சுகாதார மையத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வகம், மருந்து இருப்பு, தாய்சேய் நலம், பதிவேடுகள் பராமரிப்பு உட்பட 12 பிரிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வை மேயர் இந்திராணி பார்வையிட்டார். சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், மாநகராட்சி முதன்மை மருத்துவ அலுவலர் ஸ்ரீகோதை பங்கேற்றனர்.