உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தைகளுக்கான தேசிய கருத்தரங்கு

குழந்தைகளுக்கான தேசிய கருத்தரங்கு

மதுரை : மதுரை சக்தி விடியல் அமைப்பின் சார்பில் லேடிடோக் கல்லுாரியில் 6வது தேசிய அளவிலான குழந்தைகள் கருத்தரங்கு, கலைநிகழ்ச்சி, கலந்தாய்வு கூட்டம் நடந்தது.இந்திய அரசியல் சாசனம் குழந்தைகளுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து கருத்தரங்கு நடந்தது.இதில் குஜராத் சைசவ் அமைப்பு செயல் இயக்குநர் பாருல் ஷேத், உத்தரகண்ட் மவுண்டன் குழந்தைகள் அறக்கட்டளை தலைவர் அதிதி கவுர், கர்நாடகா சி.டபிள்யூ.சி., அமைப்பு செயல் இயக்குநர் கவிதா ரத்னா, சக்தி விடியல் செயல் இயக்குநர் ஜிம் ஜேசுதாஸ், இயக்குநர் ஜெஸ்லி விவாதித்தனர்.தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, புதுச்சேரி, டில்லியில் இருந்து 25 குழுக்களைச் சேர்ந்த 13 முதல் 17 வயதுக்குட்பட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.குழந்தைகள் உரிமை தொடர்பான தெருக்கூத்து, மவுனமொழி நாடகம், கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். சக்தி விடியல் செயலாளர் ஆஷா ஏற்பாடுகளை செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை