உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அமாவாசை சிறப்பு பூஜை

 அமாவாசை சிறப்பு பூஜை

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12:00 மணிக்கு விநாயகர், முருகன், சொக்கையா சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள், அர்ச்சனை நடந்தன. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடி வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. சொக்கையா சுவாமி மடத்தின் நிர்வாக தலைவர் மணிகண்டன் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை