2 மாதமாக மின்சாரம் இல்லை
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மண்டல துணைத்தாசில்தார் தாணுமூர்த்தி தலைமையில் நடந்தது.58 கிராம கால்வாய் திட்டத்தில் விரிவாக்கப்பகுதியாக அல்லிகுண்டம், மானுாத்து பகுதி கண்மாய்களையும் சேர்க்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகைக்காக விண்ணப்பித்து ஓராண்டு காலத்திற்கும் மேலாக பணம் கிடைக்கவில்லை, உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் செல்லும் ரோடு புதுப்பிக்கப்படாமல் உள்ளது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் பேசினர். உத்தப்பநாயக்கனுார் ஆரம்ப சுகாதார மையத்திற்கு மின் இணைப்பு 2 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ளது என்றனர்.