உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சத்துணவு ஊழியர்கள் மறியல்: 370 பேர் கைது

 சத்துணவு ஊழியர்கள் மறியல்: 370 பேர் கைது

மதுரை: குறைந்தபட்ச ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில்ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 370 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட்பகுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850, சத்துணவு அமைப்பாளருக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்குவது, சமையலருக்கு பணிக்கொடை ரூ .3 லட்சம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். துணைத் தலைவர்கள் சுப்புராஜ், இந்திராணி, வனிதா, மாவட்ட செயலாளர்சந்திரபாண்டிமுன்னிலை வகித்தனர். 370 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி