உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூரை இடிந்த அலுவலகம்

கூரை இடிந்த அலுவலகம்

திருமங்கலம், திருமங்கலம் ஒன்றியம் கிழவனேரியில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பழுதடைந்துள்ள இக்கட்டடத்தின் கூரை சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் இந்த அலுவலகத்தை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். சில நாட்களாக திருமங்கலம் பகுதிகளில் மழை காரணமாக வி.ஏ.ஓ., அலுவலகத்தின் முகப்பு பகுதியில் காரை பெயர்ந்து விழுந்தது.திடீரென விழுந்ததால் அலுவலகத்திற்குள் இருந்த வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் அலுவலகத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். பெரிய சேதம் ஏற்படும் முன் அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை