சத்துணவு அமைப்பாளர் வீட்டில் 10 மூடை அரிசி: பறிமுதல் செய்த அதிகாரிகள்
உசிலம்பட்டி: விக்கிரமங்கலம் அருகே மேலப்பெருமாள் பட்டியில் சத்துணவு அமைப்பா ளர் பஞ்சவர்ணம் வீட்டில் 10 மூடை அரிசி பிடிபட்டது. சத்துணவு அமைப்பாளர் பஞ்சவர்ணம் 55, வீட்டில் பள்ளிகளுக்கான சத்துணவு அரிசி மூடைகள் லாரியில் வந்து இறக்கப்படுவதாக உசிலம்பட்டி உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரே நேரில் சென்று விசாரணை நடத்தியதில் 10 அரிசி மூடைகள் அவரது வீட்டில் இருந்தன. உதவி கலெக்டரின் உத்தரவின் பேரில் தாசில்தார் பாலகிருஷ்ணன், தாலுகா விநியோக அதிகாரி மயிலேறிநாதன் உள்பட அதிகாரிகள் அரிசி மூடைகளை பறிமுதல் செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், 'சத்துணவு மையங்களில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக வீட்டில் இறக்கி வைத்துள்ளோம்' என தெரிவித்துள்ளனர். இருந்த போதும் முன் அனுமதி இல்லாமல் வீட்டில் இறக்கியது ஏன் என்பது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.