உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.10ல் காளை, காளையர் பதிவு

ஜன.10ல் காளை, காளையர் பதிவு

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஜன.15 முதல் 17 வரை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள்,காளையர்கள் பதிவு ஜன.10ல் ஆன்லைன் மூலம் நடக்கிறது என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.அவனியாபுரத்தில் ஜன.15 ம்தேதி, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லுாரில் ஜன.17ல் ஜல்லிக்கட்டு அரசால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.inஇணையதளம் மூலம் தங்கள் பெயரை ஜன.10ம் தேதி மதியம் 12:00 மணி முதல் ஜன.11ம் தேதி மதியம் 12:00 மணி வரை பதிவு செய்ய வேண்டும்.ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகளுக்கான பதிவுகளையும் அதே இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட காலத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகள் மூன்று கிராமங்களில் நடைபெறும் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளையுடன் உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கம்உள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தோரின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய முடியும். அவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க முடியும் என தெரிவித்துஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ