லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
வாடிப்பட்டி : செக்கானுாரணி புளியங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் 24, லாரி டிரைவர். இவர் நேற்று சாணாம்பட்டியில் இருந்து திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் டிப்பர் லாரியில் கற்கள் ஏற்றி வந்தார்.குலசேகரன்கோட்டை ஆஞ்சநேயா கோயில் அருகே வந்தபோது முன்பக்க லாரி டயர் வெடித்தது. லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் கிருஷ்ணன் இறந்தார். சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. வாடிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.