ஒரு போன் போதுமே..!
குண்டும், குழியுமான ரோடு மதுரை ஆத்திகுளம் மெயின்ரோடு வீரபுலவர் காலனி பகுதியில் ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளாகிறது. குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தோண்டப்பட்ட ரோடு குண்டும், குழியுமாக ஆகி விட்டது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரித்விராஜ், வீரபுலவர்காலனி. சிரமம் தரும் ரோடு மதுரை ராஜாமில் ரோடு பகுதியில் மூன்று குப்பைத் தொட்டிகள் உள்ளன. ஏற்கனவே குறுகலாக உள்ள ரோட்டை இவை இன்னும் சிரமப்படுத்துகின்றன. குப்பையை இரவு 7:00 மணிக்கு அகற்றுவதால் அலுவலகம், பள்ளி, கல்லுாரி முடிந்து வருவோர் சிரமப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கணேசன், செல்லுார். சுற்றுச்சூழல் கேடு திருமங்கலம் அருகே மெட்டல் போர்டு கம்பெனியால் காற்றும், நீரும் பாதிப்படைந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - பாண்டி, திருமங்கலம். நீர் தேங்கும் ரோடு மதுரை எச்.எம்.எஸ்., காலனி பென்னர்நகர் முதல்தெருவில் ரோடு மிகவும் பழுதடைந்து உள்ளது. மழை நேரங்களில் நீர்தேங்கி சுகாதாரக்கேடு உண்டாகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சரோஜா, பென்னர்நகர். தெருநாய்கள் தொல்லை மதுரை தனக்கன்குளம் விரிவாக்கப்பகுதியில் சமாதானம் நகர், ஜெயம் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தெருக்களில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கடற்கரை, சமாதானம் நகர். ஆக்கிரமிப்பு இடிபாடுகள் மதுரை மேலுார்-திருச்சி மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய இடிபாடுகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாகி அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையை மாற்ற அதிகாரிகள் முன்வருவரா. - மணவாளன், மேலுார்.