உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

குண்டு குழி ரோடுகள் மதுரை பழங்காநத்தம் அருகே முத்துப்பட்டி ரோடு ரயில்வே கேட் முதல் டி.வி.எஸ்., நகர் ராஜம் ரோடு வரை, நேரு நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டியதை, சரிவர மூடாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். தரமான ரோடு அமைக்க வேண்டும். - ராதா, நேரு நகர் நடைபாதை ஆக்கிரமிப்பு மதுரை தெற்குமாசி வீதி நடைபாதையில் டூவீலர்களை நிறுத்துவதால் பாதசாரிகள் நடுரோட்டில் நடந்து செல்கின்றனர். வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த வேண்டும். - சுரேஷ், தெற்குமாசி வீதி கடமைக்கு அமைத்த ரோடு மதுரை மாநகராட்சி 35வது வார்டு அண்ணாநகர் 80 அடி ரோட்டில் 20 நாட்களுக்கு முன் தார் ரோடு அமைத்தனர். ரோட்டோரம் பவுடர் துாவி மட்டுப்படுத்தாததால் கற்கள் பெயர்ந்து வருகின்றன. ரோட்டை சரிசெய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - நீலகண்டன், கீழவாசல் குப்பை குவியல் மதுரை மாநகராட்சி 71வது வார்டு பழங்காநத்தம் தெற்கு தெருவில் குப்பை குவிந்துள்ளது. துப்புரவு பணியாளர்கள் சரிவர அகற்றாததால் கொசுத் தொல்லை பெருகி துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று அபாயம் உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தயாளன், பழங்காநத்தம் புதர்மண்டிய கழிப்பறை மதுரை மாநகராட்சி 22வது வார்டு செங்கோல் நகரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக யாருக்கும் பயன்படாத வகையில் பொதுக் கழிப்பறை கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதி மழைநீர் கால்வாய் துார்வாரப்படாமல் குப்பை நிறைந்து காணப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - திவாகர், செங்கோல் நகர் நிரம்பிய பாதாள சாக்கடை மதுரை முத்துப்பட்டி கென்னட் நகர் 4வது தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி ரோட்டில் ஆறாக செல்கிறது. ஒரு மாதமாகியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. சகதியாக மாறிவிடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும். - ராஜ்குமார், முத்துப்பட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !