உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஒரு போன் போதுமே..!

 ஒரு போன் போதுமே..!

* தேங்கும் கழிவுநீர் மதுரை எஸ்.எஸ்.காலனி சக்தி வேலம்மாள் தெருவில் கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதியில் குடியிருப்போர் நேரடியாக பாதிக்கின்றனர். மாநகராட்சியில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. - ரமேஷ், எஸ்.எஸ்.காலனி. * வெறிச்சோடிய கண்மாய் மதுரை பூதக்குடி கண்மாய் நீர் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் காலத்தில் பறவைகள், விலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கார்த்திக், வாடிப்பட்டி. * வீணாகும் குடிநீர் மதுரை மேலப்பொன்னகரம் 8 வது தெருவில், குழாய் உடைந்து குடிநீர் ரோட்டில் வீணாகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். - யோகநாதன், எல்லீஸ் நகர். * தெருநாய்கள் தொல்லை மதுரை காளவாசல் சிக்னல் பகுதியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்வோரை கும்பலாக துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - மதிவாணன், காளவாசல். * ஆக்கிரமிப்பு அட்டகாசம் மதுரை தெற்குவாசல் சின்னக்கடை தெரு முழுவதும் ஆக்கிரமிப்பாளர்களால் ரோடு சுருங்கி விட்டது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். உரிய அனுமதி இல்லாமல் ரோட்டை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - அப்துல், தெற்குவாசல். * போக்குவரத்து நெரிசல் மதுரை செனாய் நகர் ரோட்டில் அதிவேக இருசக்கர வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. வயதானோர் ரோட்டில் நடக்கவே பயப்படுகின்றனர். அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கண்ணப்பன், செனாய் நகர். * ரோடெங்கும் சாக்கடை மதுரை தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன் எதிரே ஏற்பட்டுள்ள சாக்கடை அடைப்பால் ரோடெங்கும் கழிவுநீர் வெள்ளமாக ஓடுகிறது. இப்பகுதியில் வசிப்போர் சுகாதார கேடுக்கு ஆளாகின்றனர். பத்து நாட்களுக்கு மேலாகியும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். - கார்த்திகேயன், தெற்குவாசல். * சாக்கடை அடைப்பு மதுரை சின்னசொக்கிக்குளம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாக்கடை அடைப்பால் ரோட்டில் கழிவுநீர் தேங்குகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்போருக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. மாநகராட்சி சார்பில் நிரந்தர தீர்வு காண வேண்டும். சத்யா, சின்னசொக்கிக்குளம். * அடிக்கடி விபத்து பழைய குயவர்பாளையம் பகுதி ரோடு பழுதடைந்துள்ளதால், வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்துக்களும் நடப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - நாகார்ஜூன், பழையகுயவர் பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ