உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆன்லைனில் சொத்து வரி நிர்ணயம்

ஆன்லைனில் சொத்து வரி நிர்ணயம்

மதுரை : மதுரை மாநகராட்சியில் ஆன்லைனில் சொத்துவரி நிர்ணயம் செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.தற்போது கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள், கட்டடங்களுக்கு உரிமையாளர் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலங்களுக்கு நேரடியாக சென்று, சொத்துவரி நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும். கட்டடத்தை பில்கலெக்டர், உதவி வருவாய் அலுவலர் நேரடியாக அளந்து 'கிரேடு' பகுதிக்கு ஏற்ப சொத்துவரி நிர்ணயிப்பர். 3 ஆயிரம் சதுர அடிக்குள் மண்டல அதிகாரியும், 3 ஆயிரம் முதல் 4500 சதுர அடி கட்டடங்களுக்கு உதவி கமிஷனர், 10 ஆயிரம் சதுர அடிக்குள் துணை கமிஷனர், 10 ஆயிரம் சதுர அடிக்கு மேல் கமிஷனர் அளவில் வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. வரியை நிர்ணயம் செய்வது குறைந்தது ஒரு மாதம் வரை ஆகிறது. இதை ஆன்லைனில் மாற்றி, மூன்று நாட்களுக்குள் நிர்ணயிக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ