உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

மதுரை: மதுரையில் ஐ.ஐ.எப்.எல். சமஸ்தா சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் உதயம் பெண் தொழில்முனைவு மைய துவக்கவிழா வாப்ஸ் பயிற்சி மையத்தில் நடந்தது. மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் கணேசன் பேசுகையில் ‘‘பெண்கள் புதிய தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராவதற்கு தமிழக அரசு பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்துகிறது’’ என்றார். முன்னோடி வங்கி அலுவலர் திலீபன், சி.எஸ்.ஆர். திட்ட கிளஸ்டர் மேலாளர் நாராயணன், பயிற்சி மைய செயலாளர் அருள், திட்ட அலுவலர் சுப்புராஜன், கிரீன் பெம் நிறுவன இயக்குநர் இளமதி கலந்து கொண்டனர். திட்ட மேலாளர் சங்கவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ