பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
மேலுார்:கேசம்பட்டி பெரிய அருவி நீர் தேக்கம் நிறைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கண்மாய்கள் நிரம்பாததால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. எனவே, சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் திறக்கவில்லை.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து செயற்பொறியாளர் சிவபிரபாகர் தலைமையில் நீர்வளத்துறையினர் தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.