உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

சோழவந்தான்: விக்கிரமங்கலத்தில் திருமங்கலம் பிரதான கால்வாயில் இருந்து விரிவாக்க கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இங்கு திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பிரியும் விரிவாக்க கால்வாயின் மூலம் 19 ஆயிரத்து ஐநுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. முதலைக்குளம் கண்மாயில் தொடங்கி மறவன் குளம் கண்மாய் வரை மொத்தம் 33 கண்மாய்கள் இதன் மூலம் தண்ணீரை பெறுகின்றன. பிரதான கால்வாய் 17 கி.மீ., நீளம், மற்ற கால்வாய்கள் 47 கி.மீ., செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ., அய்யப்பன் திறந்து வைத்தார். வைகை பாசனக் கோட்டத் தலைவர் ராமன் தலைமை வகித்தார். நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் செல்லையா முன்னிலை வகித்தார். முன்னாள் கவுன்சிலர்கள் கனிச்செல்வம், மூக்கன் விவசாயிகள் பாண்டி, அறிவழகன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ