உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை, : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கும், திருச்செந்துாரில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இன்று (நவ. 6) இரவு 10:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06099) செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி வழியாக நாளை காலை 8:30 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.மறுமார்க்கத்தில் நாளை (நவ. 7) இரவு 10:15 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06100) ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், திருநெல்வேலி ,கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக நவ.8 காலை 10:30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும்.இரு ரயில்களிலும் 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 7 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.இவற்றிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ