உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆப்பரேஷன் சிந்துார் பா.ஜ., சார்பில் பேரணி

ஆப்பரேஷன் சிந்துார் பா.ஜ., சார்பில் பேரணி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மண்டல் பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் பேரணி நடந்தது. மண்டல் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ராஜப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், முன்னாள் மண்டல தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், மாவட்ட தலைவர் சிவலிங்கம் உட்பட பலரும் தேசியக் கொடியேந்தி பங்கேற்றனர். பஸ் நிலையத்தில் துவங்கி ஜி.எஸ்.டி., ரோடு, கீழ ரத வீதி, மேலரத வீதி, சன்னதி தெரு வழியாக சென்று 16கால் மண்டபம் முன்பு நிறைவு செய்தனர்.முன்னதாக பெரிய ரத வீதி வழியாக பேரணி செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சிறிது நேரம் போலீசாருக்கும் பா.ஜ., வினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவழியாக பேச்சு வார்த்தை நடந்து பேரணிக்கு அனுமதித்தனர்.

உசிலம்பட்டி

செல்லம்பட்டி அரசு பள்ளி அருகில் இருந்து ஒன்றிய அலுவலகம் வரை பா.ஜ., சார்பில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எதிர்த்து நடந்த ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏந்தி, பிரதமர் மோடி, முப்படைத் தளபதிகள், ராணுவ வீரர்களுக்கு, நன்றி தெரிவித்து ஊர்வலம் நடந்தது.மாவட்ட பொதுச்செயலாளர் இன்பராணி, தொழில் முனைவோர் பிரிவு மாவட்டத் தலைவர் பிரகாஷ், செயலாளர் தீபன்முத்தையா, சிவ முருகன், நிர்வாகிகள் நவீன், அரவிந்த், மணிகண்டன், பாலகிருஷ்ணன், பிரபு, சவுந்தர்பாண்டி, கருப்பையா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை