உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மூக்கையாத்தேவர் மணிமண்டபத்திற்காக  கள்ளர் மாணவர் விடுதியை இடிக்க எதிர்ப்பு 

மூக்கையாத்தேவர் மணிமண்டபத்திற்காக  கள்ளர் மாணவர் விடுதியை இடிக்க எதிர்ப்பு 

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மறைந்த பா.பி., தலைவர் மூக்கையாத்தேவருக்கு அரசு சார்பில் ரூ.6.50 கோடியில் மணிமண்டபம் அமைக்க பழைய அரசு பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி இருந்த பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. கள்ளர் பொது நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட கள்ளர் விடுதியை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இந்திய மக்கள் பா.பி., சுரேந்திரன் தலைமையிலான அணி எதிர்ப்பு தெரிவித்தது. நேற்று பழைய கட்டடங்களை இடிக்கும் பணி துவங்கியது. தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழைய கள்ளர் மாணவர் விடுதியை இடிக்க முற்பட்டபோது முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து தி.மு.க., நிர்வாகிகளும் குவிந்தததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ' நீதிமன்றம் சென்று தீர்வு காணுங்கள். அதுவரை பள்ளிக்கட்டடம் இருந்த பகுதியில் மட்டும் பணிகள் நடக்கும்' என அறிவித்து பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை