உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய உத்தரவு மதுரையில் 69 பணியிடங்கள் காலி

ஊராட்சி செயலாளர் பணி நியமனம் செய்ய உத்தரவு மதுரையில் 69 பணியிடங்கள் காலி

மதுரை: அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ஊராட்சி மன்றங்கள் செயல்படுகின்றன. இதன் தலைவர்கள் பதவிகாலம் முடிந்ததால் ஊராட்சி செயலாளர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த பணியிடங்கள் பல மாவட்டங்களில் காலியாக உள்ளன. மதுரை மாவட்டத்தில் 420 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 69 ஊராட்சிகளில் செயலாளர்கள் கிடையாது. காலி இடங்களை நிரப்ப செப். 29ல் அரசு உத்தரவிட்டது. இதன்படி அக்.10 முதல் ஒரு மாதத்திற்குள் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். நவ.10 முதல் 24க்குள் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படும். நவ.25 முதல் டிச.3 வரை தகுதியான விண்ணப்பங்களை பட்டியலிட வேண்டும். டிச.4 முதல் டிச.12க்குள் நேர்காணல் நடத்த வேண்டும். டிச.15,16ல் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். டிச.17ல் பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !